6000 பட்டதாரிகளுக்கு தொழில் வழங்குமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கை
18-08-2012 06:55 PM
Comments - 0       Views - 663
                                                                        (ஒலிந்தி ஜயசுந்தர)

தொழில்வாய்ப்பற்ற சுமார் 6000 பட்டதாரிகளுக்கு புதிய சுற்றுநிருபமொன்றை விடுப்பதன் மூலம் தொழில் வழங்குமாறு ஜனாதிபதியை தொழில்வாய்ப்பற்ற பட்டதாரிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

2010, 2011 ஆம் ஆண்டுகளில் பட்டதாரியானவர்களுக்கு தொழில்வாய்ப்பு வழங்கப்படும் என ஜனாதிபதி அண்மையில் கூறியிருந்தார். ஆனால், அரசாங்கத்தினால் வழங்கப்படும் தொழில்வாய்ப்பு கிடைக்கவில்லை என மேற்படி சங்கத்தின் பேச்சாளர் தம்மிக முனசிங்க கூறினார்.

'ஜனாதிபதி இவ்வாறு கூறியதன்பின்னர் பெரும் எண்ணிக்கையான இளைஞர்கள் எதிர்பார்ப்புகளை கொண்டிருநத்னர்.  இவ்விடயம் உறுதிப்படுத்தப்படுவதற்காக அவர்கள் காத்திரக்கிறார்கள். புதிய ஆட்சேர்ப்புக்காக புதிய சுற்றுநிருபமொன்றை வெளியிடுமாறு அரசாங்கத்தை நாம் வலியுறுத்துகிறோம்' என தம்மிக முனசிங்க கூறினார்."6000 பட்டதாரிகளுக்கு தொழில் வழங்குமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கை" இந்த செய்திக்காக கிடைத்துள்ள கருத்துக்கள்... (0)
Leave a comment
Name :
Name is required
Email :
Email is required
Comment :
Comment cannot be empty