கல்வித்துறை குளறுபடிகளே பயங்கரவாதத்திற்கு வழிவகுத்தன: ரணில்
20-08-2012 03:11 PM
Comments - 1       Views - 511

(யொஹான் பெரேரா, நிஷான் காஸிம்)

கல்வித்துறையில் ஏற்பட்ட குளறுபடிகளே இலங்கையில் பயங்கரவாதத்திற்கு வழிவகுத்த பிரதான காரணி  என ஐ.தே.க. தலைவர் ரணில் விக்கிரமசிங்க இன்று கூறினார்.

பல்கலைக்கழகத்திற்கு மாணவர்கள் தெரிவாக முடியாத நிலையிலேயே வடக்கில் ஆயுதப் போராட்டம் ஆரம்பமாகியது என்பதை அரசாங்கம் மனதில் கொள்ள வேண்டும் என கொழும்பில் இன்று நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் அவர் கூறினார்.

"1973, 1974, 1975 ஆம் ஆண்டுகளில் இது நடந்தது. அரசாங்கம் இதை மனதில் கொள்ள வேண்டும்" என அவர் தெரிவித்தார்.

த.தே.கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் கருத்துத் தெரிவிக்கையில்,

வடபகுதி மாணவர்கள் பல்கலைக்கழகத்திற்கு செல்ல முடியாத நிலையால் பெரும் குழப்பத்திற்கும் மன உளைச்சலுக்கும் ஆளாகி இருந்ததாகவும் வசதியுடைய பெற்றோர் தமது பிள்ளைகளை பிரிட்டனுக்கு கல்வி கற்க அனுப்பியதாகவும் கூறினார்.

'"ஈழ மாணவர் பொது ஒன்றியம் மற்றும் ஈழ மாணவர் புரட்சிகர அமைப்பு (ஈரோஸ்) முதலாவது மாணவர் அமைப்புகளாகின. அவர்கள் இரு பிரிவினராக பிரிந்தனர். அதுவரை தமிழர் போராட்டம் அரசியல் தலைமைத்துவத்தினால் கையாளப்பட்டது. இளைஞர்கள் அதில் ஈடபடவில்லை' என அவர் கூறினார். தனது சகாவும் ஈ.பி.ஆர்.எல்.எவ். தலைவருமான சுரேஷ் பிரேமச்சந்திரனும் பிரிட்டனில் கல்வி கற்ற ஒருவர் எனவும் பலஸ்தீனத்தில் ஆயுதபயிற்சி பெறுவதற்காக கல்வியை கைவிட்டவர் எனவும் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்தார்.

க.பொ.த. உயர்தரப் பரீட்சை பிரச்சினைகள் தொடர்பாக ஆராய்வதற்கு நாடாளுமன்றத் தெரிவுக்குழுவொன்றை நியமிக்க வேண்டுமென தமது கட்சி ஆலோசனை முன்வைத்ததாகவும் ரணில் விக்கிரமசிங்க கூறினார்.

மேல் நீதிமன்ற முன்னாள் நீதிபதி டபிள்யூ.எம்.பி.பீ. வராவெ வ கூறுகையில், கல்வித்துறை குளறுபடிகளானவை அரசியல்வாதிகளால் சுட்டிக்காட்டப்படுவதாக மாத்திரம் அல்லாமல் மக்கள் எதிர்கொள்ளும் எரியும் பிரச்சினையாக உள்ளது எனக் கூறினர்.

"இது ஒரு சிலர் மாத்திரம் எதிர்கொள்ளும் பிரச்சினை அல்ல. முழு நாட்டையும் இது பாதித்துள்ளது. இது தொடர்ந்தால் பல்கலைக்கழகங்கள், பாடசாலைகள் மற்றும் முழுக் கல்வித்துறையும் மூடப்பட வேண்டியேற்படலாம்" என அவர் கூறினார். படங்கள்:- பிரதீப் தில்ருக்ஷன


"கல்வித்துறை குளறுபடிகளே பயங்கரவாதத்திற்கு வழிவகுத்தன: ரணில்" இந்த செய்திக்காக கிடைத்துள்ள கருத்துக்கள்... (1)
nafa 21-08-2012 07:41 AM
இதை ஆரம்பித்தது யார்?, வழி நடத்தியது யார்? இது எல்லாமே உங்களுக்கு தெரியும்.
Reply .
0
0
Leave a comment
Name :
Name is required
Email :
Email is required
Comment :
Comment cannot be empty