அவுஸ்திரேலியா செல்ல முற்பட்ட 95 இலங்கை அகதிகள் இந்தியாவில் கைது
09-09-2012 10:51 AM
Comments - 0       Views - 525
அவுஸ்திரேலியா நோக்கி சட்டவிரோதமாக பயணிக்கவிருந்ததாகக்  கூறப்படும் 95 இலங்கை அகதிகள் உட்பட 97 பேரை இந்தியாவின் மங்களூர் பொலிஸார் நேற்று சனிக்கிழமை இடைமறித்துள்ளனர். 

அத்துடன், அவுஸ்திரேலியாவில் வேலைவாய்ப்புக்களை பெற்றுத்தருவதாகக் கூறி இவர்களிடம் பணம் பெற்றுக்கொண்ட குற்றச்சாட்டின் பேரில் 13 பேரையும் இந்தியப் பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

22 பெண்கள், 6 சிறுவர்கள் உட்பட 84 பேர் மனிதக் கடத்தல் முயற்சியில் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்கள் பாதுகாப்பாக தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் மங்களூர்ப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கைதுசெய்யப்பட்டவர்களில் இந்தியப் பிரஜைகள் எனக் கூறப்படும் 14 பேர் பிறிதாக தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.
"அவுஸ்திரேலியா செல்ல முற்பட்ட 95 இலங்கை அகதிகள் இந்தியாவில் கைது " இந்த செய்திக்காக கிடைத்துள்ள கருத்துக்கள்... (0)
Leave a comment
Name :
Name is required
Email :
Email is required
Comment :
Comment cannot be empty