'சிரேஷ்ட உறுப்பினர்களுடன் கலந்துரையாடிய பின் யாருக்கு ஆதரவென்பது தீர்மானிக்கப்படும்'
09-09-2012 05:04 PM
Comments - 6       Views - 1252
(கெலும் பண்டார)

கிழக்கு மாகாண சபையின் ஆட்சியினை அமைப்பதற்கு தேவையான ஆசனங்களை எந்தவொரு கட்சியும் பெறாத நிலையில், தீர்மானிக்கும் சக்தியாக உள்ள ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், சிரேஷ்ட உறுப்பினர்களுடனான கலந்துரையாடலின் பின்னரே இறுதி தீர்மானம் எடுக்கும் என அக்கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.

மாகாணத்தில் ஆட்சியை ஏற்படுத்துவது தொடர்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தனிடமிருந்து தனக்கு முதலாவதாக தொலைபேசி அழைப்பு வந்தது என அவர் குறிப்பிட்டார்.

இந்த விடயம் தொடர்பில் கலந்துரையாடுவதற்கு வருமாறு, நாடாளுமன்ற உறுப்பினர் சஜின் வாஸ் குணவர்த்தன ஊடாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அழைப்பு விடுத்ததாகவும் ஹக்கீம் தெரிவித்தார்.

"கட்சியின் வெற்றிக்காக பாடுபட்டவர்களுக்கு நன்றி தெரிவிக்க நான் முதலில் கடமைப்பட்டுள்ளேன். முஸ்லிம்களை பெரும்பான்மையாக கொண்ட அனைத்து தொகுதிகளிளும் நாம் வெற்றியடைந்துள்ளோம்".

"மாகாண சபை ஆட்சியை அமைப்பதற்கான ஆதரவினை யாருக்கும் வழங்குவதற்கு முன்னர், கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்களுடன் நான் கலந்துரையாட வேண்டும். எவ்வாறாயினும் அர்த்தமுள்ள அதிகார பரவலாக்கம் மற்றும் நல்லாட்சி ஆகியவற்றை உருவாக்குவதற்கு ஆதரவளிப்போம்" என அவர் தெரிவித்தார்.

"'சிரேஷ்ட உறுப்பினர்களுடன் கலந்துரையாடிய பின் யாருக்கு ஆதரவென்பது தீர்மானிக்கப்படும்'" இந்த செய்திக்காக கிடைத்துள்ள கருத்துக்கள்... (6)
mohammedrizvi 09-09-2012 12:22 PM
கட்சியின் உயர் மட்டத்துடன் பேசுவது சரிதான் .அத்தோடு உங்களுக்கு வோட் பண்ணிய எமது மக்களிடமும் வந்து உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் தீர்மானம் பற்றி ஆலோசனையை கேளுங்கள்.
Reply .
1
3
kiyas 09-09-2012 01:40 PM
யாருடன் ஆட்சி அமைக்க விரும்பினாலும் சும்மா போக வேண்டாம் ஒன்று முதல் அமைச்சர் விசயத்தில் கண்டிப்பாக இருக்க வேண்டூம்...
Reply .
1
2
nafa 10-09-2012 04:47 AM
நீங்கள் தமிழ் அரசுடன் இணைந்து சேருங்கல்.
Reply .
1
1
Ilyas M.Surais 10-09-2012 01:37 PM
தலைவரே வரலாற்றுத் தவறை விட வேண்டாம்.
நீங்கள் தமிழ் அரசுக்கட்சியுடன் சேரவும்.
நிறைய சாதிக்கலாம்.
Reply .
0
0
Rizard 10-09-2012 06:55 PM
ஏதோ பெரிதாக பேசுவதாக நாடகம் ஆடுவீர்கள் இறுதியில் அரசிடம் பெட்டிப் பாம்பாக ஒட்டிப் போவீர்கள். தேர்தல் காலங்களில் அரசாங்கம் உங்களுக்கு ஏசிய ஏச்சிற்கும் உங்களுக்கு செய்த அநியாயத்திற்கும் ரோசமுள்ள தன்மானமுள்ள எந்த மனிதனும் அரசாங்கத்துடன் சேரமாட்டார். உங்களுடைய சொகுசுகளை பார்க்காது வரலாற்றில் மெச்சக்கூடிய முடிவை எடுங்கள்.
Reply .
0
0
Hassan-Akp 11-09-2012 04:52 AM
அரசுடன் சேர்வதை பெரும்பான்மையான முஸ்லிம்கள் விரும்பவேவில்லை. அதுதான் அதாஉல்லாவுக்கும் சரியான அடி.
Reply .
0
0
Leave a comment
Name :
Name is required
Email :
Email is required
Comment :
Comment cannot be empty