லஞ்ச, ஊழல் ஆணைக்குழுவிடம் சுஜீவ சேனசிங்க முறைப்பாடு
20-09-2012 07:24 PM
Comments - 0       Views - 424

ஊழியர் சேமலாப நிதியம் மற்றும் ஊழியர் நம்பிக்கை நிதியத்தின் ஆகியவற்றின் நிதியை பங்குச் சந்தையில் முதலீடு செய்வது குறித்து லஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழுவிடம் ஐ.தே.க. நாடாளுமன்ற உறுப்பினர் சுஜீவ சேனசிங்க முறைப்பாடு செய்துள்ளார்.

கேள்விக்குரிய இந்த முதலீடுகள் காரணமாக ஊழியர் சேமலாப நிதியம் மற்றும் ஊழியர் நம்பிக்கை நிதியம் ஆகியவற்றுக்கு 12 பில்லியன் ரூபா இழப்பு ஏற்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

மத்திய வங்கி ஆளுநர் அஜித் நிவார்ட் கப்ரால், திறைச்சேரி செயலாளர் பி.பீ. ஜயசுந்தர, நிமல் வெல்கம, மனோ ராமநாதன், நில் உமகிலிய ஆகியோர் இந்த இழப்பிற்கு பொறுப்பாளிகள் என தனது முறைப்பாட்டில் சுஜீவ சேனசிங்க தெரிவித்துள்ளார்.
 
கேள்விக்குரிய இந்த முதலீடுகள் குறித்து லஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழு விசாரணை மேற்கொண்டு, பொறுப்பானவர்களை  தண்டிக்கும் என தான் நம்புவதாக அவர் தெரித்துள்ளார். (படப்பிடிப்பு - பிரதீப் பத்திரண)


"லஞ்ச, ஊழல் ஆணைக்குழுவிடம் சுஜீவ சேனசிங்க முறைப்பாடு" இந்த செய்திக்காக கிடைத்துள்ள கருத்துக்கள்... (0)
Leave a comment
Name :
Name is required
Email :
Email is required
Comment :
Comment cannot be empty