ராஜஸ்தான் அணியை இலகுவாக எடுத்துக்கொள்ள வேண்டாம்: ட்ராவிட்
07-05-2012 01:17 PM
Comments - 0       Views - 242
ராஜஸ்தான் ரோயல்ஸ் அணியை இலகுவான அணியாகக் கருத்திற்கொள்ள வேண்டாம் எனவும், அவ்வாறு எடுத்துக்கொண்டால் அதற்கான பலனை அனுபவிக்க வேண்டியேற்படும் எனவும் ராகுல் ட்ராவிட் தெரிவித்துள்ளார்.

ராஜஸ்தான் ரோயல்ஸ் அணி சிறந்த அணி என்பதை இத்தொடரில் ஏற்கனவே காட்டியுள்ளோம் எனத் தெரிவித்த ராகுல் ட்ராவிட், ஏராளமானோர் ராஜஸ்தான் ரோயல்ஸ் அணிக்கான வெற்றிவாய்ப்புக்களை வழங்காதிருந்த போதிலும், போட்டிகளை வென்று காட்டியுள்ளோம் என ராகுல் ட்ராவிட் தெரிவித்துள்ளார்.

இதுவரை 11 போட்டிகளில் பங்குபற்றியுள்ள ராஜஸ்தான் ரோயல்ஸ் அணி 10 புள்ளிகளுடன் 5ஆவது இடத்தில் காணப்படுகிறது. முதல் 4 அணிகளும் அடுத்த சுற்றுக்குத் தெரிவாகவுள்ள நிலையில், அடுத்த சுற்றுக்கு தெரிவாக முடியும் எனவும் ராகுல் ட்ராவிட் தெரிவித்தார்.

இத்தொடர் முழுவதும் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளதாகத் தெரிவித்த அவர், டெல்லி டெயாடெவில்ஸ் அணிக்கெதிரான போட்டியைத் தவிர ஏனைய போட்டிகளில் போட்டித்தன்மையுடன் ஆடியதாகத் தெரிவித்தார்.

பலம் குறைந்த அணி என்ற பெயருடன் விளையாடுவது குறித்து மகிழ்ச்சியடைவதாகத் தெரிவித்த ராகுல் ட்ராவிட், இன்னமும் 5 போட்டிகள் மீதமுள்ள நிலையில் போட்டிகளில் வெற்றிபெற்று அடுத்த சுற்றுக்குத் தயாராகவுள்ளதாகத் தெரிவித்தார்.

தொடர்ந்தும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினால் ராஜஸ்தான் அணியால் சிறந்த இடத்தைப் பெறமுடியும் எனவும் அவர் தெரிவித்தார். (க்ரிஷ்)
"ராஜஸ்தான் அணியை இலகுவாக எடுத்துக்கொள்ள வேண்டாம்: ட்ராவிட்" இந்த செய்திக்காக கிடைத்துள்ள கருத்துக்கள்... (0)
Leave a comment
Name :
Name is required
Email :
Email is required
Comment :
Comment cannot be empty