மெல்பேர்ண் அணிக்காக இணைந்தார் முரளிதரன்
13-07-2012 04:11 PM
Comments - 0       Views - 332
உலக சாதனைச் சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரன் - அவுஸ்திரேலியாவின் பிக்பாஷ் தொடரில் பங்குபற்றுவதற்காக மெல்பேர்ண் றெனிகேர்ட்ஸ் அணியுடன் இணைந்துள்ளார். ஏற்கனவே இது தொடர்பான செய்திகள் வெளியாகியிருந்த போதிலும் தற்போது அது உத்தியோகபூர்வமாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

ஒரு பருவகாலத்தை அவுஸ்திரேலியாவில் விளையாட விரும்பியதாகத் தெரிவித்த முத்தையா முரளிதரன் ஆகவே மெல்பேர்ண் றெனிகேர்ட்ஸ் அணியுடன் விளையாடக் கிடைத்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ள விரும்பியதாக முத்தையா முரளிதரன் தெரிவித்தார். கடந்த தடவை முதலாவது பிக்பாஷ் போட்டிகளை நியூசிலாந்திலிருந்து பார்த்ததாகவும், அது சிறந்த தொடராகக் காணப்பட்டதாகவும் தெரிவித்தார்.

முத்தையா முரளிதரன் - மெல்பேர்ண் றெனிகேர்ட்ஸ் அணி சார்பாக விளையாடவுள்ள நிலையில் டெஸ்ட் உலகின் இரண்டாவது அதிகூடிய விக்கெட்டுக்களைக் கைப்பற்றிய ஷேன் வோண் - மெல்பேர்ணைச் சேர்ந்த மற்றைய அணியான மெல்பேர்ண் ஸ்ரார்ஸ் அணிக்காக விளையாடுவார் என எதிர்பார்க்கப்படும் நிலையில் டெஸ்ட் உலகின் அதிகூடிய விக்கெட்டுக்களைக் கைப்பற்றிய இரண்டு வீரர்களும் ஒரே பிரதேசத்தைச் சேர்ந்த அணிகளில் எதிரெதிர் வீரர்களாகப் பங்குபற்றவுள்ளனர்.

அவுஸ்திரேலியாவில் வைத்து பந்தை எறிகிறார் எனக் குற்றஞ்சாட்டப்பட்ட முத்தையா முரளிதரன் அதன் பின்னர் அவுஸ்திரேலியாவில் வைத்து ரசிகர்களால் பந்தை எறிகிறார் என கேலிக்கு உள்ளாக்கப்பட்ட சந்தர்ப்பங்கள் உள்ள நிலையில் அவுஸ்திரேலியாவின் பிராந்திய அணி சார்பாகப் பங்குபற்ற முரளிதரன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளமை ரசிகர்களுடனான முரளியின் உறவை வலுப்படுத்த உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.
"மெல்பேர்ண் அணிக்காக இணைந்தார் முரளிதரன்" இந்த செய்திக்காக கிடைத்துள்ள கருத்துக்கள்... (0)
Leave a comment
Name :
Name is required
Email :
Email is required
Comment :
Comment cannot be empty