தேசிய விளையாட்டு போட்டியில் பங்குபெறும் ஜூடோ வீரர்களுக்கான பயிற்சி முகாம்
12-07-2012 10:16 AM
Comments - 0       Views - 380

(ரி.லோஹித்)

38ஆவது தேசிய விளையாட்டு போட்டியில் பங்குபெறுவதற்காக தெரிவு செய்யப்பட்ட கிழக்கு மாகாணத்தின் மட்டக்களப்பு அம்பாறை மாவட்டங்களைச் சேர்ந்த வீரர்களுக்கான ஜூடோ பயிற்சி முகாம் நேற்று புதன்கிழமை மட்டக்களப்பு இந்துக் கல்லூரியில் நடைபெற்றது.

இவர்களுக்கான இந்தப்பயிற்சிகள் கிழக்கு மாகாண விளையாட்டுப் பணிப்பாளர் இஷான் விஜேயதிலக ஏற்பாட்டில் நடைபெற்றன. இப் பயிற்சிகளை ஜுடோ பயிற்சியாளரான பாலித்த வாணிகரட்ண வழங்கினார்.

இதற்கான ஏற்பாட்டாளர்களாக மட்டக்களப்பு மாவட்ட விளையாட்டு உத்தியோகத்தர் வி.ஈஸ்பரன் பொறுப்பெற்று நடத்தினார். இப்பயிற்சி முகாமில், அம்பாறை, மட்டக்களப்பு மாவட்டங்களிலிருந்து 15க்கு மேற்பட்ட ஜுடோ போட்டிக்குத் தெரிவு செய்யப்பட்டவர்கள் இப் பயிற்சி முகாமில் கலந்து கொண்டனர்.
"தேசிய விளையாட்டு போட்டியில் பங்குபெறும் ஜூடோ வீரர்களுக்கான பயிற்சி முகாம்" இந்த செய்திக்காக கிடைத்துள்ள கருத்துக்கள்... (0)
Leave a comment
Name :
Name is required
Email :
Email is required
Comment :
Comment cannot be empty