innerback
innerback

உலகக் கிண்ண இறுதிப்போட்டிக்காக ஜனாதிபதி மும்பை செல்கிறார்
31-03-2011 12:38 PM
Comments - 0       Views - 2603

 

நாளை மறுதினம் சனிக்கிழமை மும்பையில் நடைபெறவுள்ள இலங்கை - இந்திய அணிகளுக்கிடையிலான உலகக் கிண்ண கிரிக்கெட் இறுதிப்போட்டியை பார்வையிடுவதற்காக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மும்பை செல்லவுள்ளார்.

'இந்த உலகக் கிண்ண சுற்றுப்போட்டியுடன் ஓய்வு பெறவுள்ள முத்தையா முரளிதரனுக்கான காணிக்கையாக உலகக் கிண்ணத்தை  நாம் வெல்ல வேண்டும் என ஜனாதிபதி விரும்புகிறார்' என ஜனாதிபதியின் ஊடகப்பேச்சாளர் பந்துல ஜயசேகர தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்றுமுன்தினம் நடைபெற்ற நியூஸிலாந்து அணியுடனான அரையிறுதிப்போட்டியை ஜனாதிபதியும் அவரின் 3 புதல்வர்களும் கண்டுகளித்தமை குறிப்பிடத்தக்கது.

அப்போட்டியின் பின்னர் இலங்கை அணியினருக்கு வாழ்த்து தெரிவித்த ஜனாதிபதி, உலகக் கிண்ணத்தை வென்றுவருவதற்கு இலங்கை வீரர்களை உற்சாகப்படுத்தினார்.
 

"உலகக் கிண்ண இறுதிப்போட்டிக்காக ஜனாதிபதி மும்பை செல்கிறார்" இந்த செய்திக்காக கிடைத்துள்ள கருத்துக்கள்... (0)




Leave a comment
Name :
Name is required
Email :
Email is required
Comment :
Comment cannot be empty