ஏஞ்சலோ மத்தியூஸ் விலகல், சுராஜ் ரந்தீவ் இலங்கை குழாமில்
01-04-2011 03:52 PM
Comments - 1       Views - 2730

இலங்கை அணியின் வேகப்பந்துவீச்சாளர் ஏஞ்சலோ மத்தியூஸ் நாளை நடைபெறவுள்ள உலகக்கிண்ண இறுதிப்போட்டியில் விளையாட மாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் சுழற்பந்துவீச்சாளர் சுராஜ் ரந்தீவ் 15 பேர் கொண்ட இலங்கை குழாமில் சேர்க்கப்பட்டுள்ளார்.

இலங்கை அணியின் சுழற்பந்துவீச்சாளர் முத்தையா முரளிதரன் , சகலதுறை வீரர் ஏஞ்சலோ மத்தியூஸ் ஆகியோர் காயங்களால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதனால் வேகப்பந்துவீச்சாளர் சமிந்த வாஸ், சுழற்பந்துவீச்சாளர் சுராஜ் ரந்தீவ் ஆகியோர் ஏற்கெனவே மாற்றுவீரர்களாக மும்பைக்கு அழைக்கப்பட்டனர்.

இந்நிலையில் ஏஞ்சலோ மத்தியூஸின் உடல்நிலையில் போதிய முன்றேற்றம் ஏற்படாததையடுத்து சுழற்பந்துவீச்சாளரான ரந்தீவை அணியில் சேர்ப்பதற்கு ஐ.சி.சியிடம் இலங்கை கிரிககெட் சபை அனுமதி கோரியிருந்தது.

இப்போட்டி ஆரம்பமாகுவதற்கு 24 மணித்தியாலங்களுக்கு குறைவான அவகாசமே உள்ள நிலையில் ரந்தீவ்வை அணியில் சேர்ப்பதற்கு ஐ.சி.சி.  இன்று அனுமதி வழங்கியது.

முத்தையா முரளிதரன் முழுமையாக குணமடையாவிட்டாலும் அவர் இறுதிப்போட்டியில் விளையாடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதேவேளை, இந்திய அணியின் வேகப்பந்துவீச்சாளரான ஆஷிஸ் நெஹ்ராவும் காயம் காரணமாக இப்போட்டியில் பங்குபற்றமாட்டார் என கருதப்படுகிறது

"ஏஞ்சலோ மத்தியூஸ் விலகல், சுராஜ் ரந்தீவ் இலங்கை குழாமில்" இந்த செய்திக்காக கிடைத்துள்ள கருத்துக்கள்... (1)
atheef 02-04-2011 05:13 AM
சமிந்த வாஸ் தான் இலங்கை அணிக்கு வேணும் சுராஜ் வேண்டாம் .
Reply .
0
0
Leave a comment
Name :
Name is required
Email :
Email is required
Comment :
Comment cannot be empty