யாழ் தென்மராட்சியில் குழந்தையொன்று மின்னல் தாக்கி உயிரிழப்பு
25-04-2010 11:45 AM
Comments - 0       Views - 5242
யாழ் தென்மராட்சி பகுதியில் மின்னல் தாக்கி குழந்தையொன்று உயிரிழந்துள்ளது.

யாழ் தென்மராட்சி மட்டுவில் கிழக்கு பகுதியிலேயே இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. இரண்டு வயதுடைய சாந்தகுமார் அபிநயா என்ற குழந்தையே  இவ்வாறு மின்னல் தாக்கியதில் உயிரிழந்துள்ளது.

இதேவேளை, இந்த மின்னல் தாக்கியதில் படுகாயமடைந்த குறித்த குழந்தையின் தாயார் யாழ் சாவகச்சேரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். பின்னர் குறித்த குழந்தையின் தாயார்  மேலதிக சிகிச்சைக்காக யாழ் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.


"யாழ் தென்மராட்சியில் குழந்தையொன்று மின்னல் தாக்கி உயிரிழப்பு" இந்த செய்திக்காக கிடைத்துள்ள கருத்துக்கள்... (0)




Leave a comment
Name :
Name is required
Email :
Email is required
Comment :
Comment cannot be empty
ad4