நட்பு
24-06-2012 09:24 AM
Comments - 1       Views - 903


தூசு கவிழ்ந்த ஸ்பரிச நீட்சியில்
நாட்காட்டி சிறகசைக்க
காலச்சுவரில்
எழுதப்பட்ட எழுத்துக்கள்
ஒவ்வொன்றும்
நீர்ச்சுணை மீது
ஓவியமாய் அலைகின்றது

அழிக்க முடியாத நட்பின்
வரைவிலக்கணங்களைத் தவிர
அனைத்தும் காலாவதியான
செய்தியாகவே
உனக்கும் எனக்கும் நிழலாகின்றது

                                            எல். வஸீம் அக்ரம்

"நட்பு" இந்த செய்திக்காக கிடைத்துள்ள கருத்துக்கள்... (1)
bhakirtha 06-07-2012 02:17 PM
நட்புக்கு நல்ல கவிதை
Reply .
0
0
Leave a comment
Name :
Name is required
Email :
Email is required
Comment :
Comment cannot be empty