நேரடி தொலைக்காட்சி விவாதத்தில் துப்பாக்கியை காட்டி அச்சுறுத்திய நபர்
10-07-2012 02:39 PM
Comments - 0       Views - 914
நேரடி தொலைக்காட்சி விவாதமொன்றில் பங்கேற்ற நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் மீது எதிர்தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர் பாதணிகளை கழட்டி எறிந்ததுள்ளதுடன் துப்பாக்கியை காட்டி அச்சுறுத்திய சம்பவம் ஜோர்தானில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

முன்னாள் பிரதியமைச்சரான மன்சூர் செய்ப் அல் டின் மூர்ட் சிரிய உளவாளி என ஜோர்தான் நாடாளுமன்ற உறுப்பினர் மொஹம்மட் சோவாப்காவே  கூறியதையடுத்து இம்மோதல் ஏற்பட்டது.

அவதூறு குற்றச்சாட்டுக்களை முன்வைத்தமைக்காக நாடாளுமன்ற உறுப்பினர் சோவ்பகா எழுந்து நின்று தனது பாதணிகளை கழற்றி முரட்மீது எறிந்துள்ளார்.

பின்பு தனது ஜாக்கெட்டிலிருந்து துப்பாக்கியை எடுத்து எதிர்தரப்பு உறுப்பினர் மீது காட்டி அச்சுறுத்தினார்.

எனினும் இந்நிகழ்ச்சியின் தொகுப்பாளர் மொஹம்மட் ஹஸ்பாஸ்னே, இருவருக்குமான பிணக்கை முடிவுக்கு கொண்டு வந்ததுடன் ஒளிபரப்பப்பட்ட நிகழ்ச்சியும் திடீரென நிறைவு செய்யப்பட்டது.

இவர்கள் சண்டையிட்ட காட்சியானது ஜோர்தானிய செய்மதி தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
"நேரடி தொலைக்காட்சி விவாதத்தில் துப்பாக்கியை காட்டி அச்சுறுத்திய நபர்" இந்த செய்திக்காக கிடைத்துள்ள கருத்துக்கள்... (0)
Leave a comment
Name :
Name is required
Email :
Email is required
Comment :
Comment cannot be empty