ஐபேட் பயன்படுத்தும் ஒரங்குட்டான் குரங்குகள்
11-07-2012 05:11 PM
Comments - 0       Views - 574
அமெரிக்கா, புளோரிடா மாநிலத்திலுள்ள மிருகக்காட்சிசாலையொன்றில் ஒரங்குட்டான் இன குரங்குகள் 'ஐபேட்' கருவியை பயன்படுத்தி அங்கு பணிபுரியும் ஊழியர்களுடன் தொடர்பை ஏற்படுத்தி வருகின்றன.

மியாமியில் உள்ள ஜங்கிள் ஐலன்ட் பூங்காவில் உள்ள இந்த மிருகக்காட்சிசாலையின் ஊழியர்களிடம் தமக்கு என்ன  உணவுகள் தேவை என்பதை தெரிவிப்பதற்கு மேற்படி ஒரங்குட்டான் குரங்குகள்  ஐபேட்டை பயன்படுத்துகின்றன.

மேற்படி மிருகக்காட்சிசாலையின் பராமரிப்பாளரான லின்டா ஜெகோப்ஸ்  இது குறித்து கூறுகையில், 'அவற்றிடம் புத்திகூர்மை அதிகம் உள்ளது. எம்மிடம் தொடர்புக்கொள்வதற்குத் தேவையான புத்திகூர்மை அவற்றிடம் உள்ளது. ஆனால், உரையாடுவதற்கு அவற்றிடம் குரல்வளை அல்லது குரல்பெட்டிகள் இல்லை. இந்த ஐபேட்கள் அவற்றுக்கான குரலை வழங்குகின்றன' எனத் தெரிவித்துள்ளார்.

'அவற்றில் சில குரங்குகள் பீட்ரூட்டை விட கரட்டை அதிகமாக விரும்புகின்றன. எனவே அவற்றுக்கு தெரிவுகள் இருக்க வேண்டுமல்லவா?

வேறு ஒருவர் தெரிவு செய்யும் உணவை தினமும் உண்பதற்கு நான் விரும்புவதில்லை. அக்குரங்களுக்கு தமக்கு தேவையான உணவை தெரிவு செய்ய இயலுமாக இருக்க வேண்டும்' என லின்டா ஜெகோப்ஸ்  மேலும் தெரிவித்துள்ளார்.
"ஐபேட் பயன்படுத்தும் ஒரங்குட்டான் குரங்குகள்" இந்த செய்திக்காக கிடைத்துள்ள கருத்துக்கள்... (0)
Leave a comment
Name :
Name is required
Email :
Email is required
Comment :
Comment cannot be empty