3 இளைஞர்களுடனான பாலியல் உறவின்பின், வல்லுறவு குற்றச்சாட்டு சுமத்திய பெண்ணுக்கு சிறை
19-09-2012 05:12 PM
Comments - 0       Views - 1349
மதுபோதையில் மூன்று இளைஞர்களுடன் பாலியல் உறவுகொண்ட பின்னர், மேற்படி இளைஞர்கள் தன்னை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தினார்கள் என்று பொலிஸில் முறையிட்ட பெண்ணொருவருக்கு இரண்டு வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட சம்பவம் இங்கிலாந்தில் இடம்பெற்றுள்ளது.

ரோஸி டொட் என்ற 20 வயது யுவதியொருவருக்கு இத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இந்த யுவதி கடந்த ஜுன் மாதம் கசினோ விடுதியில் வொட்கா மதுபானம் அருந்திய 25, 23, 21 வயது இளைஞர்களை சந்தித்துள்ளார். அவர்களுடன் பஸ்ஸில் பயணித்துள்ளதுடன் தகாத முறையிலும் நடந்துகொண்டுள்ளார்.

பின் அவர்களுடன் ஒருவர் பின் ஒருவராக பாலியல் உறவில் ஈடுபட்டுள்ளார். ஆனால், இது இச்சம்பவத்தின் காரணமாக தான் அசுத்தமானவளாக உணர்வதாக தனது நண்பர்களிடம் அப்பெண் கூறியுள்ளதுடன், தான் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டதாக பொலிஸாரிடம் அப்பெண் பொய் கூறியுள்ளார்.

அதையடுத்து மேற்படி ஆண்கள் கைது செய்யப்பட்டு பொலிஸ் காவலில் அடைக்கப்பட்டனர்.

ஆனால் டொட் ரோஸியின் முரண்பாடுகளை ஆராய்ந்த பொலிஸார், அவரது அவரை விசாரிக்கத் தொடங்கினர். இறுதியில் தான் பொய்க்குற்றச்சாட்டு சுமத்தியதை அப்பெண் ஒப்புக்கொண்டுள்ளார்.

'நீங்கள் சுமத்திய குற்றச்சாட்டுகளின்படி வழக்குத்தொடுக்கப்பட்டிருந்தால் மேற்படி இளைஞர்கள் தவறான வகையில்  தண்டனையை எதிர்கொள்ள வேண்டியிருந்திருக்கும். 10 நாட்களுக்கு முன்பாகத்தான் உங்கள் முறைப்பாடு உண்மையற்றது என நீங்கள் ஒப்புக்கொண்டுள்ளீர்கள். உங்களுக்கு உண்மையை சொல்வதைவிட பொய் கூறுவது இலகுவாக இருந்துள்ளது. நீங்கள் இவ்வாறான குற்றச்சாட்டுக்களை ஏன் முன்வைத்தீர்கள் என எனக்குப் புரியவில்லை' என நோட்டிங்ஹாம் நீதிமன்ற நீதிபதி ஜோன் மில்மோ, தனது தீர்ப்பை அளித்தபோது தெரிவித்துள்ளார்.
"3 இளைஞர்களுடனான பாலியல் உறவின்பின், வல்லுறவு குற்றச்சாட்டு சுமத்திய பெண்ணுக்கு சிறை" இந்த செய்திக்காக கிடைத்துள்ள கருத்துக்கள்... (0)
Leave a comment
Name :
Name is required
Email :
Email is required
Comment :
Comment cannot be empty