விக்ரமுடன் தாண்டவமாடும் எமி...
28-04-2012 12:09 PM
Comments - 0       Views - 1914

இங்கிலாந்தில் இருந்து தமிழ்த் திரையுலகிற்கு இறக்குமதி செய்யப்பட்ட எமி ஜக்ஸன், தற்போது தமிழ், தெலுங்கு, இந்தி என அனைத்து மொழிப் படங்களிலும் மிகவும் மும்முரமாக உள்ளார்.

அதுமாத்திரமன்றி, இந்தியாவின் பிரபல சவர்க்கார நிறுவனமொன்றினதும் விளம்பரத் தூதராக இவர் நியமிக்கப்பட்டுள்ளார் என்பதும் விசேடமானதே.

தனது முதல் திரைப்படமான மதராசப்பட்டிணத்திலேயே தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி அனைவர் மனங்களிலும் இடம்பிடித்த எமி, அதன் பின்னர் 'ஏக் தீவானா தா' என்ற இந்தித் திரைப்படத்தில் நடித்தார்.

தற்போது, நடிகர் விக்ரமின் 'தாண்டவம்' திரைப்படத்தின் கதாநாயகியாக எமி ஜக்ஸன் நடித்து வருகிறார். அத்துடன், தெலுங்கில் 'யேவடு' என்ற திரைப்படத்தில் இரு கதாநாயகிகளில் ஒருவராகவும் எமி தெரிவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
"விக்ரமுடன் தாண்டவமாடும் எமி..." இந்த செய்திக்காக கிடைத்துள்ள கருத்துக்கள்... (0)
Leave a comment
Name :
Name is required
Email :
Email is required
Comment :
Comment cannot be empty