அனுஷ்காவால் வருந்தும் ஹன்ஸிகா...
20-09-2012 05:22 PM
Comments - 0       Views - 1649

வேலாயுதம், ஒரு கல் ஒரு கண்ணாடி போன்ற ஹிட் திரைப்படங்களில் நடித்து, தற்போது வாலு, வேட்டை மன்னன் என பெரிய திரைப்படங்களில் சோலோ நாயகியாக நடித்துக்கொண்டிருப்பவர் நடிகை ஹன்ஸிகா.

இப்படி முன்னணியில் உள்ள தன்னை, சிங்கம் 2 திரைப்படத்தில் அனுஷ்காவுடன் இரண்டாவது நாயகியாக நடிக்க ஹன்சிகா தயங்குவதாக தகவல்கள் கசிந்துள்ளன.

சூர்யா நடிக்கும் சிங்கம் 2 திரைப்படத்தின் பூஜை நேற்றுதான் சென்னையில் நடந்து, படப்பிடிப்பும் தொடங்கியுள்ளது. இந்த திரைப்படத்தில் இரு நாயகிகள். முதல் நாயகி அனுஷ்கா. இரண்டாவதுதான் ஹன்சிகா.

முன்னணியில் உள்ள தன்னை இரண்டாவது நாயகியாக்கியதில் ஹன்சிகாவுக்கு ஏக வருத்தமாம். இரண்டாவது நாயகியாக நடித்தால், அந்த இமேஜ், தான் அடுத்து ஒப்பந்தமாகும் திரைப்படங்களில் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால், எப்படி இந்த திரைப்படத்தைத் தவிர்ப்பது என அவர் யோசித்து வருவதாகக் கூறப்படுகிறது.

நடிகையின் இந்த குழப்பத்தை அறிந்த இயக்குநர், என் திரைப்படத்தில் ஸ்கிரிப்டுக்குதான் முக்கியத்துவம். அதன் படி இருவருக்குமே சமமான வேடங்கள்தான்... கவலை வேண்டாம் என்று கூறியுள்ளாராம்.


"அனுஷ்காவால் வருந்தும் ஹன்ஸிகா..." இந்த செய்திக்காக கிடைத்துள்ள கருத்துக்கள்... (0)
Leave a comment
Name :
Name is required
Email :
Email is required
Comment :
Comment cannot be empty