திரைப்படம் தயாரிக்கிறார் அஜித்...
21-09-2012 05:22 PM
Comments - 0       Views - 2205

விரைவில் தன் சொந்த திரைப்பட நிறுவனத்தை அறிவிக்கப் போகிறாராம் நடிகர் அஜித்குமார். இந்த நிறுவனத்துக்கு 'குட்வில் புரொடக்ஷன்ஸ்' என்று பெயர் வைத்துள்ளதாகவும், அட்டகத்தி திரைப்படம் இயக்கிய ரஞ்சித் தனது முதல் திரைப்படத்தை இயக்கப்போகிறார் என்றும் செய்திகள் வெளியாகியுள்ளன.

அண்மையில் நடிகர் அஜித்தை சந்தித்த ரஞ்சித் குமார், ஒரு கதையைச் சொன்னதாகவும், அது பிடித்துப் போனதால் அதனை தானே சொந்தமாக தயாரிக்க அஜீத் முடிவு செய்துவிட்டதாகவும் கூறுகிறார்கள். இத்திரைப்படத்தில் ராஜ்கிரண் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறாராம்.

ஆனால் இது தொடர்பில் அஜித் தரப்பு மௌனத்தையே பதிலாக வைத்துள்ளதாம். அஜித் இப்போது மூன்று திரைப்படங்களுக்கு கோல்ஷீட் கொடுத்துள்ளாராம். அவற்றில் ஒன்று ஆரம்பமாகிவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

"திரைப்படம் தயாரிக்கிறார் அஜித்..." இந்த செய்திக்காக கிடைத்துள்ள கருத்துக்கள்... (0)
Leave a comment
Name :
Name is required
Email :
Email is required
Comment :
Comment cannot be empty