சகோதரிகள் மீது துஷ்பிரயோகம் புரிந்த பூசகருக்கு விளக்கமறியல்
28-05-2012 11:54 AM
Comments - 0       Views - 538
(சீ.எம். ரிஃபாத்)
சகோதரிகள் இருவரை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கியதாக கூறப்படும் விஹாரையொன்றில்  பணியாற்றும் பூசகர் ஒருவரை  அடுத்த மாதம் 14 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு தெல்தெனிய பதில் நீதவான் எஸ்.பி.மடுகல்ல உத்தரவிட்டுள்ளார்.

இந்த சகோதரிகள் இருவரும் கண்டி பொக்காவெல பகுதியைச் சேர்ந்தவர்கள் எனத் தெரியவந்துள்ளது.

இவர்கள் தமது குடும்பத்தில் தாய் உட்பட ஏனையவர்களுக்கு அடிக்கடி நோய்கள் மற்றும் பிரச்சினைகள் ஏற்படுவது தொடர்பாக பரிகாரம் காணும் பொருட்டு பன்விலயில் அமைந்துள்ள  விஹாரையொன்றிற்குச்   சென்றுள்ளனர்.

இவர்களின் குடும்பத்தார் மீது தெய்வகுற்றம் இருப்பதாகக்கூறி, அதற்கு தாம் பரிகாரம் செய்வதாக தெரிவித்து சகோதரிகள் இருவரையும் பூசகர் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியுள்ளார்.

இதனையடுத்து சகோதரிகள் இருவரும் முறைபாடு செய்ததை அடுத்து, பன்வில பொலிஸார்  பூசகரை கைதுசெய்து நீதவான் முன்னிலையில் நேற்று மாலை ஆஜர்செய்தனர்.
"சகோதரிகள் மீது துஷ்பிரயோகம் புரிந்த பூசகருக்கு விளக்கமறியல்" இந்த செய்திக்காக கிடைத்துள்ள கருத்துக்கள்... (0)
Leave a comment
Name :
Name is required
Email :
Email is required
Comment :
Comment cannot be empty