மானிப்பாயில் ஹெரோயின் விற்பனையில் ஈடுபட்ட 5 சந்தேக நபர்கள் கைது
28-05-2012 01:21 PM
Comments - 0       Views - 308
(கவிசுகி)

யாழ்ப்பாணம், மானிப்பாய் பகுதியில் ஹெரோயின் போதைப் பொருள் விற்பனைச் சந்தேகநபர்கள் ஜவர் இன்று திங்கள் கிழமை விசேட அதிரடிப் படையினரால் கைது செய்யப்பட்டு மானிப்பாய் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஹெரோயின் விற்பனைக் குழுவினரிடமிருந்து 200 மில்லிக்கிராம் ஹெரோயின் போதைப் பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் அவர்கள் தொடர்ச்சியாக போதைப் பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டு வந்தமை விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளதாக மானிப்பாய் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

யாழில் போதைப் பொருள் விற்பனை நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்துவதற்குரிய நடவடிக்கையில் யாழ்.குடாநாட்டுப் பொலிஸார் ஈடுபட்டு வருவதாக யாழ்.பொலிஸ் நிலையத் தலைமைப் பொறுப்பதிகாரி சமன் சிகேரா தெரிவித்துள்ளார்.
"மானிப்பாயில் ஹெரோயின் விற்பனையில் ஈடுபட்ட 5 சந்தேக நபர்கள் கைது" இந்த செய்திக்காக கிடைத்துள்ள கருத்துக்கள்... (0)
Leave a comment
Name :
Name is required
Email :
Email is required
Comment :
Comment cannot be empty