சிறையிலிருந்தவாறு மகனால் கோரப்பட்ட கப்பப் பணத்தை வசூலித்த தந்தை கைது
17-06-2012 02:31 PM
Comments - 0       Views - 503
சிறைத்தண்டனை அனுபவித்துவரும் மகனின் கப்பப் பணத்தைப் பெற்றுக்கொள்வதற்காக வங்கியொன்றுக்குச் சென்ற தந்தை பொலிஸாரால் கைது செய்யப்பட்ட சம்பவமொன்று கம்பஹாவில் இடம்பெற்றுள்ளது.

16 வருட சிறைத்தண்டனை அனுபவித்து வரும் 25 வயதான சந்தேகநபர், நாடு முழுவதிலுமுள்ள பிரபல வர்த்தகர்களில் சிலருக்கு தொலைபேசி மூலம் அச்சுறுத்தல் விடுத்து கப்பம் பெற்று வந்துள்ளார்.

இவ்வாறு பெற்றுக்கொள்ளப்படும் கப்பப் பணம், கம்பஹாவிலுள்ள வங்கியொன்றில் வைப்பிலிடப்படும் பட்சத்தில் அதனை, மேற்படி கைதியின் தந்தை வங்கியிலிருந்து மீளப்பெற்று வந்துள்ளார்.

இந்நிலையிலேயே அவர் இன்று பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். அத்துடன், தந்தையின் பெயரில் வங்கிக் கணக்குகள் பேணப்படுகின்றனவா? என்பது குறித்தும் மேற்படி கப்பம் பெறும் நடவடிக்கை தொடர்பிலும் பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். (தரிந்து ஜயவர்தன)
"சிறையிலிருந்தவாறு மகனால் கோரப்பட்ட கப்பப் பணத்தை வசூலித்த தந்தை கைது " இந்த செய்திக்காக கிடைத்துள்ள கருத்துக்கள்... (0)
Leave a comment
Name :
Name is required
Email :
Email is required
Comment :
Comment cannot be empty