innerback
innerback

தளுவ பிரதேசத்தில் கசிப்பு உற்பத்தி நிலையம் முற்றுகை; இருவர் கைது
20-06-2012 09:02 AM
Comments - 0       Views - 362
(எஸ்.எம்.மும்தாஜ்,ஜூட் சமந்த)

புத்தளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தளுவ பிரதேசத்தில் சட்டவிரோத கசிப்பு உற்பத்தி நிலையம் ஒன்று நேற்று செவ்வாய்க்கிழமை முற்றுகையிடப்பட்டதுடன், இருவர்  புத்தளம் விசேட  அதிரடிப்படையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இந்த  சட்டவிரோத கசிப்பு உற்பத்தி நிலையம் முற்றுகையிடப்பட்ட வேளையில் கசிப்பு உற்பத்தி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருந்ததாக விசேட அதிரடிப்படையினர் தெரிவித்தனர்.  இதன்போது 200 கசிப்பு போத்தல்களுடன் கசிப்பு உற்பத்தி செய்வதற்காக பயன்படுத்தப்படும் 200,000 டிரேம் கோடா, செப்புக்கம்பிகள், பெரும் எண்ணிக்கையான பரல்களையும் விசேட அதிரடிப்படையினர் கைப்பற்றியுள்ளனர்.

புத்தளம் விசேட அதிரடிப்படை முகாமின் உத்தரவிடும் அதிகாரி பொலிஸ் பரிசோதகர் ஆர்.பி.வசந்த பெரேராவின் மேற்பார்வையில் இந்த சுற்றிவளைப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
"தளுவ பிரதேசத்தில் கசிப்பு உற்பத்தி நிலையம் முற்றுகை; இருவர் கைது " இந்த செய்திக்காக கிடைத்துள்ள கருத்துக்கள்... (0)




Leave a comment
Name :
Name is required
Email :
Email is required
Comment :
Comment cannot be empty