முறக்கொட்டாஞ்சேனையில் இளம் தாய் சடலமாக மீட்பு
20-06-2012 03:36 PM
Comments - 0       Views - 506
(ரி.லோஹித்)

மட்டக்களப்பு மாவட்டத்தின் ஏறாவூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முறக்கொட்டாஞ்சேனை பிரதேச வீடொன்றில் இளம் தாய் ஒருவரின் சடலத்தினை பொலிஸார் மீட்டுள்ளனர். முறக்கொட்டாஞ்சேனை பாடசாலை வீதியைச் சேர்ந்த 21 வயதுடைய ரசீகரன் வினோதினி என்ற இளம் தாயே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இன்று காலை கணவர் வழங்கிய தகவலின் அடிப்படையில், சம்பவ இடத்துக்கு விரைந்த  பொலிஸார் குறித்த பெண்ணின் சடலத்தை படுக்கையறையில் இருந்து மீட்டுள்ளனர். சடலம் மாவடிவேம்பு வைத்தியசாலைக்கு பிரேத பரிசோதனைக்காக எடுத்துச் செல்லப்பட்டுள்ளது.

சம்பவ இடத்துக்கு வந்த ஏறாவூர் நீதிவான் மன்ற நீதிபதி சடலத்தினைப்பார்வையிட்டதுடன், பிரேத பரிசோதனைக்கும் உத்தரவிட்டுள்ளார். இம் மரணத்தில் சந்தேகம் நிலவுவதனால், மேலதிக விசாரணைகளை ஏறாவூர் பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.
"முறக்கொட்டாஞ்சேனையில் இளம் தாய் சடலமாக மீட்பு" இந்த செய்திக்காக கிடைத்துள்ள கருத்துக்கள்... (0)
Leave a comment
Name :
Name is required
Email :
Email is required
Comment :
Comment cannot be empty