innerback
innerback

மனைவியை கொலை செய்த குற்றச்சாட்டில் கணவர் கைது
13-07-2012 10:14 AM
Comments - 0       Views - 417
(ஆர்.அனுருத்தன்)

மனைவியை கொலை செய்துவி;ட்டு தலைமறைவாகியிருந்ததாகத் தெரிவிக்கப்படும் கணவரான சந்தேக நபரை நேற்று வியாழக்கிழமை தாம் கைதுசெய்துள்ளதாக வாகரைப் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஜ.பி.ஜெயசீலன் தெரிவித்தார்.

கடந்த 30.06.2012ஆம் ஆண்டு  வெருகல் கல்லறுப்பு பிரதேசத்தில் சேனைப்பயிர் செய்கையில் ஈடுபட்டிருந்த  மனைவியை கூரிய ஆயுதமொன்றினால் வெட்டிக் கொலை செய்ததாகத் தெரிவிக்கப்படும் இச்சந்தேக நபர்,  கடந்த 2 வாரங்களாக காட்டுப்பகுதியில் தலைமறைவாகியிருந்ததாகவும் அவர் கூறினார்.
 
தமக்கு கிடைத்த தகவலையடுத்து இச்சந்தேக நபர் கைதுசெய்யப்பட்டதாகவும் அவர் கூறினார்.

வாழைச்சேனை மாவட்ட நீதிவான் நீதிமன்றத்தில் இன்று வெள்ளிக்கிழமை இச்சந்தேக நபர் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.
"மனைவியை கொலை செய்த குற்றச்சாட்டில் கணவர் கைது " இந்த செய்திக்காக கிடைத்துள்ள கருத்துக்கள்... (0)




Leave a comment
Name :
Name is required
Email :
Email is required
Comment :
Comment cannot be empty