பொலிஸில்முறைப்பாடு செய்த சிறுமியை வல்லுறவுக்குள்ளாக்கிய பொலிஸ் சார்ஜன்ட் விளக்கமறியலில்
13-07-2012 02:20 PM
Comments - 1       Views - 1088
                                                                         (சுரங்க ராஜநாயக்க)

பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடொன்றைச் செய்த சிறுமியொருவரை பாலியல் வல்லுறவுக்குட்படுத்திய குற்றச்சாட்டில் நாவலபிட்டிய பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்த சார்ஜன்ட் ஒருவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

செல்வந்த வர்த்தகர் ஒருவரின் மகன் தன்னை பாலியல் வல்லுறவுக்குட்படுத்தியதாக மேற்படி சிறுமி பொலிஸில் முறைப்பாடு செய்திருந்தார்.

தனது தாயுடன் வசித்து வரும் இச்சறுமி ஜுலை 4 ஆம் திகதி தான் கடைக்குச் சென்றபோது அறிமுகமான முச்சக்கர வாகன சாரதியொருவர் அச்சிறுமியை வாகனத்தில் ஏறுமாறு கூறியுள்ளார்.

அச்சிறுமி வாகனத்தில் ஏறியபின்னர் வழியில் மேற்படி செல்வந்தரின் மகனும் அவ்வாகனத்தில் ஏறியுள்ளார். இவ்விருவரும் அச்சிறுமியை வாடிவீடொன்றுக்கு கொண்டு சென்று இரு நாட்கள் பாலியல் வல்லுறவுக்குட்படுத்தியதாக கூறப்படுகிறது.

பின்னர் இச்சிறுமி நாவலப்பட்டி நகரில் விடப்பட்ட பின்னர் அவர் 119 எனும் அவசர தொலைபேசி இலக்கத்திற்கு முறைப்பாடு செய்தார்.

எனினும் அச்சிறுமியை ஏமாற்றிய சார்ஜன்ட் முச்சக்கர வாகன சாரதியொருவருடன் இணைந்து அந்த சிறுமியை வாடிவீடொன்றுக்கு அழைத்துச் சென்று இருவரும் அச்சிறுமியை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியதாக தெரிவிக்கப்படுகிறது.

பின்னர் சிறுமியை அவளின் தாயாரிடம் ஒப்படைத்த சார்ஜன்ட், மறுநாள் பொலிஸாருக்கு அறிவிக்குமாறு கூறினார். அச்சிறுமி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டபின் சிறுமியின் நிலை தெரியவந்தது.

அதையடுத்து, தலைமறைவான சார்ஜன்ட்டை கைது செய்வதற்கு பொலிஸ் குழுவொன்று அனுப்பப்பட்டது. சார்ஜன்ட்டின் மனைவியின் ஊடாக சார்ஜன்டை கண்டுபிடித்த பொலிஸார் அவரை கைது செய்து நீதிமன்றில் ஆஜர்படுத்தினர்.

அதையடுத்து மேற்படி சார்ஜன்ட்டையும் முச்சக்கர வாகன சாரதியையும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.

மத்திய மாகாண பிரதி பொலிஸ் மா அதிபர் அம்பன்வெல மற்றும் கம்பளை சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ரொஷான் பெர்னாண்டோவின் அறிவுறுத்தலின் பேரில்  உதவி பொலிஸ் அத்தியட்சகர் அநுர தேவபிரிய மற்றும் பி. விமலதாஸ ஆகியோரடங்கிய குழுவொன்று இது தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகிறது.

"பொலிஸில்முறைப்பாடு செய்த சிறுமியை வல்லுறவுக்குள்ளாக்கிய பொலிஸ் சார்ஜன்ட் விளக்கமறியலில்" இந்த செய்திக்காக கிடைத்துள்ள கருத்துக்கள்... (1)
IBNUABOO 13-07-2012 02:27 PM
இப்படியான படுமோசமான பாலியல் சம்பவம் இந்நாட்டில் நடைபெறுவதென்றால் எவ்வளவு கேவலமாக இந்நாடு சீர்கெட்டுள்ளது. இப்படி உலகில் இங்குதான் நடைபெறும். காரணம் சட்டமும் ஒழுங்கும் சீரில்லை. தண்டனை குறைவு... இலங்கை அரசாங்கம் காப்பாற்ற முடியாது. கடவுள் தான் காப்பாற்ற முடியும்
Reply .
0
3
Leave a comment
Name :
Name is required
Email :
Email is required
Comment :
Comment cannot be empty