வெள்ளிக்கிழமை, 10 பெப்ரவரி 2012
தொடர்பு  | English | සිංහල

நல்லிணக்க ஆணைக்குழுவில் முப்படைத் தளபதிகள் சாட்சியமளிப்பு

(செவானி சிநோன், இந்திக்க ஸ்ரீஅரவிந்த)

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் நியமிக்கப்பட்டுள்ள 'கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் முன்னிலையில் முப்படைத் தளபதிகள்  மற்றும் ஏனைய சிரேஷ்ட இராணுவ அதிகாரிகள் இன்று புதன்கிழமை மாலை சாட்சியமளித்துள்ளனர்.  

கொழும்பிலுள்ள லக்ஷ்மன் கதிர்காமர் நிறுவனத்தில்  இன்று மாலை இடம்பெற்ற நல்லிணக்க ஆணைக்குழு விசாரணையில் இராணுவத் தளபதி லெப்ரினட் ஜெனரல் ஜகத் ஜயசூரிய, கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் திசேரா சமரசிங்க மற்றும் விமானப்படத் தளபதி ரொஷான் குணதிலக ஆகியோர் சாட்சியமளித்தனர்.

வடபகுதியில் இடம்பெற்ற இறுதிக்கட்ட யுத்த நடவடிக்கைகளின்போது சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் பிரசன்னமாகியிருந்தபோதிலும்,  அந்த சங்கம் இராணுவத்தினருக்கு எதிராக எந்தவித முறைப்பாடுகளையும் முன்வைக்கவில்லை எனவும் இராணுவத் தளபதி சாட்சியமளிக்கையில் தெரிவித்தார்.

யுத்தம் முடிவடைந்திருக்கின்ற நிலையிலும், பாரியளவிலான இராணுவத்தினர் வடபகுதியில் உள்ளனர். ஆனாலும், இவர்கள் படிப்படியாக குறைக்கப்படுவதுடன், சிவில் நடவடிக்கைகளில் பொலிஸார் ஈடுபடுத்தப்படுவார்கள் எனவும் அவர் மேலும் கூறினார்.(படப்பிடிப்பு:-கீத் ஸ்ரீ டி மெல்)

 
 

Comments (0)கருத்து

Write comment
உங்கள் கருத்தை இங்கே தமிழில் type செய்யலாம். உதாரணத்திற்காக இலங்கை என்று type செய்வதற்கு ilankai என்று type செய்து ஒரு இடைவெளி விடவும். அதாவது ilankai=இலங்கை.
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
smaller | bigger

busy

 

தமிழ்மிரர் செய்திகளை உங்களது இ-மெயிலில் பெற்றுக்கொள்ள இங்கே பதிவு செய்யுங்கள்

Enter your email address: